முகப்பு > எங்களைப் பற்றி
கற்றலுக்கான பெரும் முன்னேற்றம்

கௌசெல்ராமு பதிப்பகம் பி.லிட் நிறுவனம், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டப் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நண்பர்களுக்கான சிறந்த கல்வி வழிகாட்டி நூல்களை வெளியிட்டு வருகிறது. எங்கள் புத்தகங்கள் அறிவாளி (Arivali) என்ற பெயரில் வெளியிடப்படுகின்றன, KRP அல்லது கௌசெல்ராமு பதிப்பகம் என்றும் அழைக்கப்படுகிறோம், இது ஒரே நிறுவனமே.
எங்களால் வெளியிடப்படும் கல்வி சார்ந்த நூல்கள்:
- வழிகாட்டிகள்: பாடநூலின் பின் வினாக்கள் அனைத்துக்கும் விரிவான கேள்வி–பதில்கள்.
- பயிற்சி நூல்கள்: தொடர்ந்து பயிற்சி செய்து தன்மதிப்பீடு செய்யும் அலகுவாரி கேள்விகள்.
- வினா வங்கிகள்: முந்தைய ஆண்டுகளின் தேர்வு வினாத்தாள்களின் தொகுப்பு.
கற்றலை எளிமையாகவும் வெற்றியை நோக்கியதாகவும் மாற்றுவதே எங்களது இலட்சியம்.
📘
வழிகாட்டிகள்📝
பயிற்சி நூல்கள்❓
வினா வங்கிகள்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அறிவாளி (Arivali) என்பது கௌசெல்ராமு பதிப்பகம் (KRP) தானா?
ஆம். கௌசெல்ராமு பதிப்பகம் பிரைவேட் லிமிடெட் (KRP) வெளியிடும் வழிகாட்டிகள், பயிற்சி நூல்கள் மற்றும் வினா வங்கிகளுக்கான பிராண்ட் பெயர் அறிவாளி.
எந்த வகுப்பு, பாடங்களுக்கு புத்தகங்கள் உள்ளன?
9, 10 ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வழிகாட்டிகள், பயிற்சி நூல்கள் மற்றும் வினா வங்கிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழிமுறையில் கிடைக்கும்.
எப்படி ஆர்டர் செய்வது?
இந்த வெப்சைட்டில் நேரடியாக உலாவி ஆர்டர் செய்யலாம், அல்லது WhatsApp-இல் செய்தி அனுப்பலாம். புத்தகங்களைத் தேர்ந்த பிறகு UPI மூலம் பணம் செலுத்தலாம்.
டெலிவரி எவ்வளவு நேரம் ஆகும்?
பணம் செலுத்திய 2, 3 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் இந்திய அஞ்சல் அல்லது பார்சல் கூரியர் மூலம் புத்தகங்கள் சென்றடையும்.
தள்ளுபடி உள்ளதா?
ஆம், செக்அவுட்டில் தானாகவே தள்ளுபடி கிடைக்கும்: ₹400-க்குக் கீழ் 20% தள்ளுபடி, ₹400 மற்றும் அதற்கு மேல் 40% தள்ளுபடி.
KOUSELRAMU PADHIPPAKHAM PVT. LTD.